பேருந்தினை ஓட்டி சென்ற இ.போ.ச சாரதி மீது தாக்குதல்!

முல்லைத்தீவில்  தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தவேளையில் அவர்களின் கவனயீர்ப்பு நடவடிக்கை காலை 11.00 மணிளவில் நிறைவிற்கு கொண்டுவந்த நிலையில் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கு வருகை தந்த வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தினை நேரஅட்டவணைக்கு மாறாக  சாரதி எடுத்து செல்லமுற்பட்ட போது மக்கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்னதாகவே  மக்கள் ஏறுவதை கவனிக்காது பேருந்தை கொண்டு செல்லும் அவசரத்தில் பேருந்தை செலுத்தியபோது  வீதியில் கூடிய சாரதிகள் நடத்துனர்கள் குறித்த பேருந்தினை மறித்தபோதும் அதனை பொருட்படுத்தாது பேருந்தினை எடுத்து சென்றுள்ளார்.


இதன்போது மக்கள் சிலர் மீது பேருந்து மோத முற்பட்டபோதும் பேருந்தில் ஏறிய பயணிகளை உரியவகையில் ஏற்றாதும்  அபாயகரமான முறையில் சாரதி பெருந்தினை எடுத்து சென்றார்  


இதனை தொடர்ந்து பேருந்தினை துரத்தி சென்ற சிலர் நகரில் இருந்து  சற்று தூரம் களித்து வவுனியா நோக்கி புறப்பட்ட பேருந்தினை மறித்துள்ளதுடன் சாரதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதன்போது காயமடைந்த சாரதி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தினை முல்லைத்தீவு பொலீசார் பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.


பொலிசாரின் கண்முன்னேயே மக்கள் பேருந்தினை மறிக்க மறிக்க அதனை எதுவித பாதுகாப்பும் அற்ற நிலையில் பேருந்து சாரதி எடுத்து சென்றமை மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.