மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!


மதுபான போத்தல்கள் மற்றும் பியர் கேன்கள் போலியானவையா என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு ஸ்டிக்கர் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்! | Good News For Alcohol Lovers

இந்நிலையில் மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அவற்றின் உற்பத்தியாளர், உற்பத்தி திகதி, உள்ளடக்கம் உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள ஓர் விசேட செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அலைபேசிகளில் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொண்டால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் மதுபான போத்தல்கள் அசலா அல்லது நகலா என்பதனை அறிந்து கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.