முடங்கப் போகும் மட்டக்களப்பு!!

 


மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் மாநகரசபையின் செயற்பாடுகள் முடங்கும் நிலையேற்படும் என்பதுடன், அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரே பொறுப்பேற்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குளறுபடியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எரிபொருள் விநியோக நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகரசபை புறக்கணிப்பு மட்டக்களப்பு நகரில் உள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கையின் போது அதனைப்பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்த போது, அரசாங்க அதிபரினால் அத்தியாவசிய சேவையாக கருதப்பட்டு அனுப்பப்பட்டிருந்த பெயர் பட்டியலில் மட்டக்களப்பு மாநகரசபையின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இதன்போது வரிசையில் நின்ற மாநகரசபையின் தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் பிரதேச செயலாளரினால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். மாநகரசபையின் ஊழியர்கள் மாநகரசபைக்கு கடமைக்கு வந்தால் தான் கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இதேபோன்று தீயணைப்பு செயற்பாடும் முக்கியமானதாக காணப்படுகின்றது.

ஆனால் மாநகரசபை ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் ஊழியர்கள், உத்தியோகத்தர்களின் வருகை மிக குறைவானதாக இருக்கின்றது. எரிபொருள் கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் மாநகரசபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லமுடியாது. அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானியின் பிரகாரம் மாநகரசபையும் அத்தியாவசிய தேவையாக கருதப்பட்டு மாநகரசபை ஊழியர்கள்,உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் கடந்த 10 தினங்களாக எரிபொருட்கள் வழங்கப்படாத நிலையிலும் ஐஓசி ஊடாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் 75 பேருக்கு எரிபொருட்கள் வழங்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக நகருக்குள் கழிவகற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் இன்னும் சில நாட்களில் இந்த கழிவகற்றல் செயற்பாட்டினை கொண்டுசெல்ல முடியாத நிர்ப்பந்திற்குள் நாங்கள் தள்ளப்படுவோம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.