மோசடி வழக்கில் நீதிபதி இளஞ்செழியனிடம் சிக்கிய சட்டத்தரணி!!

 


திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலையில் காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவரின் பெயரில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதி தொடர்பில் சட்டத்தரணி உட்பட இரு நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு மற்றும் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும்,மோசடியாக எழுதிய உறுதிக்கு உறுதுணையாக செயற்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,பிரதம நீதியரசரால் விசேடமாக திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கேம்ரீஜ் வீதியில் உள்ள ராணி சட்டத்தரணியான ஜோஜ் சிட்டி என்பவருக்கு சொந்தமான உரித்தும்,உடமையும் கொண்ட திருகோணமலை,நிலாவெளி கும்பிறுபிட்டி பகுதியில் உள்ள 7 ஏக்கர் காணிக்கு இந்த மோசடி உறுதி எழுதப்பட்டுள்ளது.

இம்மோசடி உறுதி 22.07.1970 ஆண்டு காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணியால் எழுதப்பட்டதாகவும், 48 வருடங்கள் காலம் தாழ்ந்து 13.12.2018 ஆம் ஆண்டு திருகோணமலை காணி பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் 22.07.1970 ஆம் ஆண்டு அதே இலக்க உறுதியொன்று நுவரெலியா ஆதனம் ஒன்றிற்கு காலம் சென்ற சிரேஸ்ட சட்டத்தரணியால் எழுதப்பட்டமையும் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோசடி உறுதியின் அடிப்படையில், திருகோணமலையில் தற்சமயம் கடமையாற்றும் சட்டத்தரணியால் 19.11.2018 ஆம் ஆண்டு ஒருவருக்கு காணி உரிமை மாற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 10 நாட்களின் பின்னர் 29.11.2018 ஆம் ஆண்டு குறித்த சட்டத்தரணிக்கு காணியில் ஒரு பங்கு உரித்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் 22.07.1970 எழுதப்பட்டதாக கூறப்படும் உறுதி மோசடியான காணி உறுதி எனவும்,70 ஆம் ஆண்டு Attornery-at-law என அழைப்பதில்லை Advocate (அப்புக்காத்து) எனவே அழைப்பர்.Attorney -At-Law சட்டம் 1976 இன் பின்னர் இப்பதவி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

எனவே இது மோசடியாகும். அதேசமயம், 1970 ஆம் ஆண்டின் உறுதியில் காலம் சென்ற சட்டத்தரணி ஜனநாயக சோசலிச சிறிலங்கா குடியரசு என குறிப்பிட்டு அத்தாட்சிப்படுத்தியுள்ளதாக மோசடி உறுதியில் காணப்படுகின்றது.

1970 ஆம் ஆண்டு இலங்கை தீவுகள் என அழைக்கப்பட்டது. (ISLANDS OF CEYLON) 1970 ஆம் ஆண்டு இலங்கை சிறிலங்கா குடியரவு என அழைக்கப்படவில்லை.


இலங்கை சிறிலங்கா குடியரசு என 1972 ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது. எனவே 1970 ஆம் ஆண்டு மோசடி உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா குடியரசு என குறிப்பிட்டுள்ளமை இரண்டாவது மோசடியாகும்.

1970 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாக கூறும் மோசடி உறுதியை 48 ஆண்டுகளின் பின் 2018 ஆம் ஆண்டு காணி பதிவகத்தில் பதிவு செய்தமை மூன்றாவது மோசடியாகும்.

எனவே மோசடி உறுதி மூலம் ராணி சட்டத்தரணி ஜோஜ் சிட்டியின் காணியில் இருந்து மோசடியாக காணியை எழுதியவர்கள், அத்துமீறி இருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோசடி உறுதிக்கு உறுதுணையாகவிருந்து காணி துண்டையும், பெற்றுக்கொண்ட சட்டத்தரணிக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் விசேடமாக குறிப்பிட்டுள்ளார்.     

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.