கொரோனா அபாய நிலையில் கம்பஹா மாவட்டம்!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் அடையாளம் காணப்பட்டவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது கம்பஹா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

அதேவேளை , பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கொரோனா விடுதிகள் மீண்டும் சிகிச்சையை ஆரம்பித்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா; அபாய நிலையில் கம்பஹா மாவட்டம்! | Corona Threatens Sri Lanka Again

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், பரிந்துரைக்கப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.