சிபெட்கோவிடுத்துள்ள அறிவிப்பு!!

 


சிபெட்கோ பெற்றோல் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் (தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை) QR குறியீடு மற்றும் வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எனவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அன்றைய தினம் முதல் எரிபொருள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வந்த ‘துண்டுச் சீட்டு (டோக்கன்) முறைமை ரத்து செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


QR குறியீட்டு முறையின் கீழ், வாகன உரிமையாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாகவும், ஒதுக்கீடு முறையில் எரிபொருள் வழங்கப்படுவதாகவும், அதன்படி இலங்கை முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் குறிப்பிட்ட அளவு எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


QRகுறியீட்டைப் பெற்ற ஒருவர் எந்த இடத்திலிருந்தும் அதனை முன்வைத்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாகவும் இது நீண்டகால வேலைத்திட்டம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.