கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் திரண்ட மக்கள்!!

 


சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப்படுகொலையாளியுமான கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.


தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையினை சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பினர்.



மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதிகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.


சிங்கப்பூர் தூதரைச் சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோட்டாபயவை கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையிகை முன்வைத்தனர்.


சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.


போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.