ரணில் பற்றி கூறியவர்கள் எங்கு இருக்கிறார்கள் தெரியுமா?


ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு துரோகம் இழைத்தவர் என்றும் கூறியவர்களே இன்று அவரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 52 நாள் அரசாங்கத்தின் போது நாடாளுமன்றத்தை சேதப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை தண்டிக்காத அரசாங்கம், தற்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் செயற்பாட்டாளர்களை கைது செய்யவது வேடிக்கையானது என்றார்.

முன்னர் புலிகளின் ஆதவாளர் ரணில் என கூறியவர்கள், தற்போது அவரின் காலடியில் வீழ்ந்து கிடப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.