யாழ்ராணி புகையிரத சேவை ஆரம்பம்


முல்லைத்தீவு மாவட்டம் அரசியல் மற்றும் அதிகார பலமற்ற ஒரு மாவட்டம் என்பதை மீண்டும் நிரூபித்த சம்பவம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற அதிகளவான அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேந்தவர்கள் இவ்வாறு இருக்க போக்குவரத்து இடர்பாடுகளை நீக்க ஆரம்பிக்கும் இந்த யாழ்ராணி புகையிரத சேவையை ஏன் மாங்குளம் வரை நடத்த கூடாது 


மாங்குளம் என்பது வட மாகாணத்தின் மைய பகுதி வடக்கு மாகாண சபையை கொண்டு வருகிறோம் என்று ஏமாத்தினர் 


புகையிரத சேவையை பொறுத்தவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையம் உள்ள போதும் இந்த புகையிரத நிலையத்தில் ஆசன பதிவு செய்யும் வசதி இல்லை


கடுகதி புகையிரத சேவையை மக்கள் பெற முடியாத நிலை குறிப்பாக மாங்குளம் நகரில் இருந்து மல்லாவி ஊடாக வெள்ளாங்குளம் மற்றும் பாண்டியன்குளம் வரையான பகுதிகளின் மக்களும் ஒட்டுசுட்டான் ஊடாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களுக்களில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சேவை பெறக்கூடிய ஒரே ஒரு புகையிரத நிலையம் மாங்குளம் புகையிரத நிலையம்


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பணிக்கு வருகின்ற அதிகாரிகள் மாங்குளம் வந்து அங்கிருந்தே ஏனைய இடங்களுக்கு செல்கின்றனர்.


இவ்வாறான பின்னணியில் ஏன் தற்போது ஆரம்பிக்கப்பட்ட யாழ்ராணி புகையிரத சேவையை கொக்காவில் காட்டுப்பகுதியில் உள்ள முறிகண்டி புகையிரத  நிலையத்தோடு சேவையை நிறுத்துகிறது அங்கிருந்து ஏனைய இடங்களுக்கு எவ்வாறு பயணத்தை தொடர்வது அங்கிருந்து வீதிக்கு வர கூட போக்குவரத்து வசதி இல்லை இவ்வாறு இருக்க ஏன் இந்த சேவையை மாங்குளம் வரை நடத்த தீர்மானிக்கவில்லை இதிலும் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிப்பா ?? முதுகெலும்பு உள்ள அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் இருந்தால் இந்த சேவையை மாங்குளம் வரை நடத்த ஏற்பாடு செய்யுங்கள்

 உண்மையில் இது வவுனியா வரை நடத்தப்பட்டிருக்க வேண்டும் 


கேட்பவர்கள் இல்லை என்ற துணிவை தவிர வேறு ஏது???


வடமாகாண ஆளுநர் அவர்களே இது உங்கள் கவனத்துக்கும் .


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.