33 பேர் காயம் - 2 பேர் கவலைக்கிடம்!!

 


33 பேர் காயம் இருவரின் நிலை கவலைக்கிடம்பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்புகை பிரயோகம், நீர்த்தாரை பிரயோகம் மற்றும் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் ஆகியவற்றின் காரணமாக 33 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.


இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதமும் மோதலும் இடம்பெற்றது. இவ்வாறான நிலையில் 33பேர்  காயமடைந்துள்ளனர்.


இவ்வாறு காயமடைந்த 33 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் செய்திகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.