குழுந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த தந்தை கைது

 


வெளிநாட்டில் உள்ள மனைவியை அச்சுறுத்துவதற்கு 5 வயது குழுந்தையின் கழுத்தில் கத்திவை வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டி காணொளியை மனைவிக்கு அனுப்பிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

மனைவி வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அவர் இந்த செயலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அந்த காணொளியை மனைவிக்கும் அவர் வெளிநாடு செல்ல வசதி செய்து கொடுத்த நிறுவனத்துக்கும் அனுப்பியுள்ளார்.

தந்தையின் செயல் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து மரண பயத்தில் அலறிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை குளியாப்பிட்டிய பொலிஸார் மீட்டுள்ளனர்.

குழந்தையின் கழுத்து பகுதியில் சிறு காயங்களுடன் தழும்பு இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தாய் வரும் வரை குழந்தை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.