ஒரு எண்ணின் கீழ் பல வாகனங்கள் பதிவு - எரிபொருள் பதிவில் மாற்றம்!!
இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் {ICTA} எரிபொருள் வழங்கல் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவைப் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வணிகப்பதிவு எண்களின் கீழ், ஒன்று அல்லது பல கைப்பேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, http://fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து, வணிக பதிவு எண் (BRN) வகையின் கீழ், முதலாவது வாகனத்தைப் பதிவு செய்யலாம்.
அதன்பின் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணின் சுயவிவரத்தில் உள்நுழைந்து, 'Add' என்பதை அழுத்துவதன் மூலம் தமது வணிகத்துக்குரிய மேலும் பல வாகனங்களை சேர்க்க முடியுமென இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமைக்கு மிக விரைவில் பதிவு செய்யுமாறும், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பெறுவதற்கு, முறையற்ற விதத்தில் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் வலுசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை