அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கைது!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு எதிரான வழக்கொன்றில் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை இன்றயை ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மேலும் சில மாணவர் சங்க செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை