அமெரிக்கா பறக்கிறார் கோட்டா?

 


இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்கா செல்வதற்காக ‘கிரீன் காட்’ கோரி விண்ணப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள், கடந்த மாதம் முதலே கிரீன் காட் வசதி மூலம் அமெரிக்க குடியுரிமை பெறும் பணியை ஆரம்பித்துள்ளனர் எனவும், கோட்டாவின் மனைவி அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் கோட்டாவாலும் அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றது.

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , நவம்பர் மாதம் வரை அங்கு இருக்கவே முன்னதாக திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அந்த முடிவை மாற்றி, எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை வர திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.