மேர்வின் விடுவிப்பு!


 குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

களனி பிரதேசத்தில் மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பலவந்தமாக நுழைந்து சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.