பிரான்சு பாரிசில் இருதினங்கள் மக்களின் உணர்வோடு திரையில் வலம்வந்த மேதகு – 2

 

பிரான்சு பாரிசில் இரண்டு தினங்கள் மேதகு 2 சிறப்பாகத் திரையிடப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 19.08.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 20.08.2022 சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் அனைவரும் எழுந்து நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மேதகு 2 திரையிடப்பட்டது.

ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்பரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் இரண்டாம் நாள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய செயற்பாட்டாளர் திரு.பாலசுந்தரம் அவர்களும் கருத்துரை வழங்கியதைத் தொடர்ந்து திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது.திரைப்படத்தை அனைவரும் ஆவலோடு வைத்தகண்வாங்காமல் கண்ணீர்மல்க கண்டு அனுபவித்ததைக் காணமுடிந்ததுடன், நிறைவில் தமது கருத்துக்களையும் பகிர்ந்து சென்றிருந்தனர்.இதேவேளை, மேதகு 2 திரைப்படம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்களையும் இணைய வழிகளில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் பல தடைகளையும் தாண்டி குறித்த திரைப்படத்தை உருவாக்க அரும்பாடுபட்ட திரைப்படக் குழுவினரையும் கலைஞர்களின் அற்பணிப்புமிக்க செயற்பாட்டையும் மனதில் இருத்தி தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிவிடவேண்டும் என்பதே தமிழ்த்தேசியப்பணியில் சிரத்தையோடு பயணிப்பவர்கள் பலரின் எதிர்பார்ப்பாகும்.ஐரோப்பியநாடுகள் உட்பட ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் மேதகு 2 சமநேரத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.பிரான்சிலும் ஏனைய மாவட்டங்களில் குறித்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.