தேடித்தேடி தேடிவைக்கின்றோம்....!
ஆனால் தேவைக்கு இல்லையென்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.... !
வாலிபமும் கடந்துவிட்டது
வாழ்வின் இளமைதனை முதுமை கவ்வி விட்டது...!
வாழ்வில் பலரும்
வந்தனர் பற்றாக்குறைக்கு
நோயென்ற ஒன்றும் இடையில் ஒற்றிக்கொண்டது...!
விடியும்போது நமக்கு விடிவதுமில்லை
இருளில் நாம் வெளிச்சத்தை காணவும் நேரமில்லை....!
இப்படியே ஓடி ஓடி உழைத்தும்கூட
இன்னமும் ஓடாய் தேய்கின்றது இந்த உடல்....!
உழைப்பு கூடும்போது
தேவைகள் கூடிவருகிறது சில உண்மையான உறவுகளை இழக்கவும் வைக்கிறது....!
பற்றாக்குறை எப்போதும் நம்மைவிட்டு போவதில்லை
பணத்தாசை இல்லாத யாருமே இவ்வுலகில் இல்லை...!
பாடையில் போகும்போது
பணத்தேவை பாதியில் நின்றுபோகும் நம் மனத்தேவை...!
இன்னமும் கலர்
காகிதங்களுக்காக
நம் வண்ணமயமான வாழ்க்கையில் அத்தனை சந்தோஷங்களையும் இழந்து காணல்நீரோடையாய் கடந்துபோகின்றோம் இந்த பணம் என்ற பிணத்துக்காக...!
-தர்மினி -
கருத்துகள் இல்லை