நுணாவில் ஐஓசி யில் பொதுமக்களுக்கும், மத குருமார்களுக்கும் பெற்றோல் விநியோகம்!

 


சாவகச்சேரி நுணாவில் ஐஓசியில் சுழற்சி முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், நாளை மறுதினம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் க்யூ ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

5ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஜே/ 299 முதல் ஜே /310 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

6 திகதி சனிக்கிழமை தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஜே/ 311, ஜே/ 312, ஜே/ 313 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் வட மாகாணத்திலுள்ள மத குருமார்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

காலை 09.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை பெற்றோல் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஓர் ஆவணத்தை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.