வன்முறைசாரா எனும் தலைப்பில் மாணவர்களின் வீதி நாடகம்

 


கிழக்கு பல்கலைக்கழக நுன் கலைத்துறை மாணவர்களினால் வன்முறை ராசா எனும் தலைப்பில் வீதி நாடகம் ஒன்று மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக வளாகத்தில் இன்று நடைபெற்றது

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் எஸ்.சந்திரகுமார் அவர்களின் எழுத்துருவிலுமா நெறியாள்கையிலும் இந்த வீதி நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது

வன்முறை தீவிரவாதத்தின் சவால்களும் மனித வாழ்வியல் நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுதலும் இந்த வீதி நாடகத்தின் கருப்பொருளாகும்

தேசிய சமாதான பேரவை .கெல் விட்டா ஐரோப்பிய ஒன்றியம் .ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் தகவல் பயிற்சி நிலையத்தினால் இந்த வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது

மண்முனைப் பற்று பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த வீதி நாடக அரங்கேற்ற வைபவத்தில் மண்முனை பற்றி பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் மற்றும் பிரதேச செயலாக உத்தியோகத்தர்கள் பல் சமய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவையும் சகவாழ்வையும் புரிந்துணர்வையும் கட்டி எழுப்பும் வகையில் இந்த நாடகம் இடம்பெற்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.