கியூபாவின் மடன்சாஸ் நகரில் எரிபொருள் கிடங்கில் தீ விபத்து!

 


கியூபாவின் மடன்சாஸ் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 121 பேர் காயமடைந்துள்ளனர்.


தீயை அணைக்கச் சென்ற 17 தீயணைப்பு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னல் தாக்கம் காரணமாக எரிபொருள் சேமிப்பு வளாகத்தில் தீ பரவியதாகவும், தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள சுமார் 2,000 குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல கியூபா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.