நாளை முதல் குரங்கம்மை பரிசோதனை !

 


நாட்டில் குரங்கம்மை நோய் தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனரா என்பதை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

பொரளை மருத்துவ பரிசோதனை நிறுவனம் மற்றும் கண்டி பொது வைத்தியசாலைக்கு நாளை (08) உரிய பரிசோதனை கருவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.