இலங்கையின் நிலைப்பாடு குறித்து பிரித்தானியா அதிருப்தி!!
.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம், இலங்கை குறித்த தகவல் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளில் அதிகாரிகள் நிற்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவல்களையும் தமது அலுவலகம் அவதானிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
சமூகச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் நேற்று கவலை வெளியிட்டிருந்தது.
கருத்துகள் இல்லை