வெள்ளிவரை மட்டுமே காலக்கெடு!!
காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர்.
அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் "சட்டவிரோத கட்டமைப்புகளை" அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸாரின் இந்த அறிவிப்பினால் அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் போராட்டகாரகள் அப்புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #TamilNadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை