மிஸ் குப்பை என அழைக்கப்பட்டவர் மிஸ் யூனிவர்ஸ் ஆனார்!!
தாய்லாந்தில் மிகவு வறுமையான குடுபத்தில் பிறந்ததால் மிஸ் குப்பை’ என விமர்சிக்கப்பட்ட யுவதியொருவர், மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்றுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
1998 ஆம் ஆண்டு பேங்கொக் நகரில் பிறந்தவர் அனா சுவேன்கம் ( Anna Suengam) . வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். அனாவின் சுவேன்காமின் ( Anna Suengam) தாய், முன்னர் குப்பை அகற்றும் ஊழியராக பணியாற்றியவர்.
இதனால், அனா பாடசாலை மாணவியாக இருந்தபோது அவரை ( Anna Suengam) ‘மிஸ் குப்பை’ என சகாக்கள் கிண்டலடித்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து இறுதிச் சுற்றில் 23 வயதான அனா சுவேன்கம் இயாம் ( Anna Suengam) முதலிடம் பெற்றார்.
மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து 2022 அழகுராணியாக முடிசூட்டப்பட்டுள்ள அவர், எதிர்வரும் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியில் தாய்லாந்து சார்பாக பங்குபற்றவுள்ளார்.
மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து போட்டியின்போது, பார்வையாளர்கள் மத்தியிலும் அனா சுவான்கம் ( Anna Suengam) பிரபலமாக இருக்கவில்லை. இப்போட்டிக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நடத்தப்ப்ட பொதுமக்களின் வாக்களிப்பில் 3.2 சதவீதத்தையே அவர் பெற்றிருந்தார்.
தாய்லாந்து இத்தாலியக் கலப்புடைய வெரோனிக்கா பகோனா 28.1 சதவீத வாக்குகளையும் தாய்லாந்து அமெரிக்க கலப்புயை நிகோலின் லிம்ஸ்னுகன் 25.2 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதேவேளை வெளிநாட்டுப் பெற்றோர் ஒருவரை கொண்டிருக்காதவர் என்பதால், அனா சுவேன்கம் ( Anna Suengam) இப்போட்டியில் வெற்றி பெற முடியாது என இப்போட்டிக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் பலர் கூறியிருந்த நிலையில் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #TamilNadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை