மாற்றமடைந்தது தங்கத்தின் விலை!!

 


உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்படி தங்கம் விலை சிறிது சரிவு கண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்த தகவலின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 வீதத்தில் குறைந்துள்ளதுடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745.81 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 181,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.