யாழ்ப்பாணத்தில் இந்தி மொழி கற்றல் வகுப்புகள் ..?


யாழ்.பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழிக்காகத் தனிப்பீடம் அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் மறுபுறமாக யாழ். பாடசாலைகளூடாக இந்திமொழி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை இந்தியத் தூதுவராலயமும் இந்திய கலாசார அமைப்பும் இணைந்து முன்னெடுக்கின்றன. இதன் முதல்பலியாக யாழ்.இந்துக்கல்லூரி தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. எத்தனையோ தமிழ் அறிவுசீவிகளையும், வீரர்களையும் வளர்த்தெடுத்த கல்லூரி இந்தியாவின் பலியெடுப்பில் உயிரிழப்பதா ? இந்திமொழியின் ஆக்கிரமிப்பு எம்மை அழிக்கும் எனச் சிந்திப்பதில்லையா ? 


உலகெங்கும் வாழும் யாழ்.இந்துவின் பழைய மாணவர் சங்கங்கள் இதற்கெதிராகத் தமது கண்டனங்களை வெளியிடவேண்டும். இதைத் தடுத்து நிறுத்தவேண்டும். 


தமிழர் மண்ணில் தமிழை அழிக்க எவர்முயன்றாலும் அவர்கள் விரட்டப்படவேண்டும், தயவுசெய்து இச்செய்தியை வேகமாகப் பரப்புங்கள். 


மொழி அழிந்தால் இனம் அழியும்.


-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.