இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!

 


'தமிழ்க்கடல்' என்று அழைக்கப்பட்ட  பிரபல தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் (77) காலமானார்.


திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார்.


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார்.


குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன்.

உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கிய இவர், இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீகச் சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். 


77 வயதானஅவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.