எனக்கு திருமணமா? - நடிகர் SJ சூர்யா!!
விரைவில் திருமணம் என பரவிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இயக்குனராக அறிமுகமான படங்கள் வாலி, குஷி இரண்டுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வியாபாரி, நியூ, இசை ஆகிய படங்கை இயக்கி அவரே நடிப்பில் களமிறங்கினார்.
தனது நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்டு தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். தற்போது வில்லனாகவும் கலக்கி வருகிறார். மெர்சல், மாநாடு படங்களில் வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதனையடுத்து இவருக்கு வில்லனாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சினிமா மீது அதீத காதலை கொண்ட, 54 வயதாகும் எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
சமீபமாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வந்தது.
இதுகுறித்து பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, "எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை.
இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை