நான் நானாகிறேன் - கோபிகை!!

 
கனத்துக் கிடக்கிறது 

என் மாங்கல்யம்

சிந்திச் சிதறிய

 கண்ணீர்த் துளிகளால்...


சீதையின் அக்கினிப் பிரவேசம் போல

எத்தனை தீக்குளிப்புகள் அன்றாடம்....

நாவின் வாள் கொண்டு நீ அறுத்தது

என் நேச நரம்புகளை.....உணர்வாயோ?


ஒரு சருகின் மரணத்தைப் போல

உயிர் துடிக்கமண் தின்றவள் நான்.

படிமங்கள் உயிர் கொள்ளும் என்பது

என் தீரா நம்பிக்கை. 


பூட்டப்பட்ட என் கனவுக் கல்லறை

மெல்ல விழி திறக்கிறது.

பொம்மையைப் போலிருந்த ஏக்கங்கள் 

ஒவ்வொன்றாய் சிறகு விரிக்கிறது.


நீயற்ற நான் வெறுங்கூடென 

உணர்ந்தவள் நானே - ஆனால் 

நீயற்ற நானே இன்று 

நானாயிருக்கிறேன்...கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.