ஆட்டத்தை தொடங்கிய சீனா!!

 


அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பியுள்ள நிலையில், சீனா மிகப்பெரிய இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.


தீவு நாடான தைவானை சுற்றி முன்னெடுக்கப்படும் இந்த மிகப்பெரிய இராணுவப் பயிற்சியானது உள்ளூர் நேரப்படி 12 மணிக்கு தொடங்கியுள்ளது. தைவானுக்கும் 12 மைல்கள் தொலைவில் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில் முதன்முறையாக முக்கிய பகுதிகளை சீனா இணைத்துள்ளது.


இதனிடையே, பிராந்தியத்தில் தற்போதுள்ள நிலையை மாற்ற சீனா முயற்சிப்பதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பியதற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலேயே சீனா இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றனர்.


ஆட்டத்தை தொடங்கிய சீனா... எது வேண்டுமானாலும் நடக்கலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் | China Begins Biggest Military Drills Around Island


மட்டுமின்றி, தைவான் உடனான வர்த்தகத்திலும் கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. இந்த நிலையில், இந்தப் பயிற்சிகள் பொறுப்பற்றவை என்றும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


சீனாவின் இந்த நடவடிக்கைகளை தைவான் இராணுவம் எச்சரிக்கையுடன் கண்காணிக்கும் எனவும், ஆனால் இன்னும் மோதலின் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆட்டத்தை தொடங்கிய சீனா... எது வேண்டுமானாலும் நடக்கலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் | China Begins Biggest Military Drills Around Island


தைவானின் வான்வெளியில் விமானங்களை பறக்கவிட சீனா முடிவு செய்தால், தைவான் அந்த விமானங்களை இடைமறிக்க முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டம் மேலும் அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இதனிடையே, சமீப நாட்களாக பல அமைச்சர்கள் இணையவளி தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. மேலும், வணிக கப்பல்களை வெவ்வேறு வழிகளில் செல்லுமாறு தைவான் சர்வதேச நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.



மட்டுமின்றி மாற்று விமான வழிகளைக் கண்டறிய ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.