நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது!

 


வெகுஜன அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் நாளை (09) நடத்தவிருந்த போராட்டத்தை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


கறுவாத் தோட்டம் பொலிஸார் விடுத்த கோரிக்கையை நிராகரித்து கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைதிக்கு குந்தகம் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாக நீதவான் மேலும் வலியுறுத்தியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.