இலங்கையில் சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை!!

 


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து, 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கைமய, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் பலத்த மழையுடனான காலநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும்,மலை பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும்,வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும்,மீனவர்கள் எதிர்வுகூறல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.