அவசரகால சட்டங்கள் திருத்தம்!


 ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டங்கள் சில பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.


கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (அ) மற்றும் 365 (ஆ) சரத்துகள் நீக்கப்பட்டு அதே பிரிவின் 408 மற்றும் 410 முதல் 420 வரையான சரத்துகள் அவசரகாலச் சட்டங்கள் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (அ) மற்றும் 365 (ஆ) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.