அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்- சஜித்
அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், தமது கட்சி சரியானவற்றிற்காக எப்போதும் கொள்கைக்கு உட்பட்டு செயற்படுவதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை