சீன கப்பலின் நிலைப்பாடு!!


சீன -  யுவான் வாங் 5, கப்பல் இன்றைய தினம் (11-08-2022) துறைமுகத்தை வந்தடையாது என்று ஹம்பாந்தோட்டை துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமையன்று, யுவான் வாங் 5 கப்பல், அதன் போக்கிலிருந்து இலங்கைக்கு நகர்வதாகக் காட்டியது.

இன்று மாலை நிலவரப்படி, இலங்கைக் கடலில் ஹம்பாந்தோட்டை தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளது.

இந்த கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (Maithripala Sirisena) இந்த கப்பல் ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று இலங்கை வாய்மொழி மூலம் சீன தூதரகத்துக்கு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதற்கும் சீன தூதரகத்திடம் இருந்து எந்த கருத்துக்களும் இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.