நீரில் மூழ்கிய ஒருவர் சடலமாக மீட்பு!!
கடந்த 1ம் திகதி நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி - கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இவர்கள் அடித்து செல்லப்பட்டிருந்தனர்.
இவர்களைத் தேடும் பணிகள் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
மாகாவலி ஆற்றின் கம்பளை - மொரகலை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
மேலும் இரண்டு பேரை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை