சோமாலியா ஹோட்டலில் தீவிரவாதிகள்!!

 


சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஹோட்டலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.


சோமாலியாவில் இயங்கி வரும் அல்-ஷபாப் தீவிரவாதிகள் குறித்த ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.


தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு குழுவை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


பணயக் கைதிகளை மீட்க சோமாலியா இராணுவம் நடத்திய நடவடிக்கையில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல்- ஷபாப் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது.


அல்-கொய்தா ஆதரவு பெற்ற இந்த இயக்கம் இராணுவ வீரர்கள், பொலிஸார் பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.


தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களை ஹோட்டலின் நுழைவு வாயிலில் மோத செய்து வெடிக்க வைத்தனர். பின்னர் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபடி ஹோட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர்.


உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.


இரு தரப்பினருக்கு இடையே நேற்று முழுவதும் சண்டை நீடித்தது. ஹோட்டலுக்குள் பாதுகாப்பு படையினர் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டனர்.


இதில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பணய கைதிகள் மீட்கப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.


70 பேர் காயம் அடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்தது. இச்சண்டை சுமார் 30 மணி நேரம் நீடித்தது.


இதுகுறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ஹோட்டலுக்குள் இருந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். கடந்த சில மணி நேரங்களாக துப்பாக்கி சூடு எதுவும் நடக்கவில்லை’ என்றார்.


தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை மற்றும் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.


ஹோட்டலுக்குள் வெடி பொருட்களை தீவிரவாதிகள் மறைத்து வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதால் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்றார்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.