வீடொன்றுக்குள் திடீரென புகுந்த புலி!

தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலி கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று (4) இரவு 11 மணியளவில் புலி ஒன்று வீடொன்றுக்குள் புகுந்துள்ளது. நாய் ஒன்றை துரத்தி வந்த புலி வீட்டின் கூரை மீது ஏறியபோது, கூரை உடைந்ததால், வீட்டுக்குள் வீழ்ந்துள்ளது.

நள்ளிரவில் வீடொன்றுக்குள் திடீரென புகுந்த  அழையா விருந்தாளியால்  பரபரப்பு! | Mid Night A Male Tiger Entered House

சத்தத்தைகேட்டு அச்சமடைந்த வீட்டிலுள்ளவர்கள் என்னவென்று பார்த்தபோது சுமார் 6 அடி நீளமான புலி வீட்டுக்குள் விழுந்துள்ளதனை கண்டுள்ளனர். இதன்போது வீட்டுக்குள் இருந்த புலியை பார்வையிட சென்ற குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் புலியின் தாக்குலுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வீட்டை பூட்டிவிட்டு, வெளியே வந்து, லிந்துலை பொலிஸாருக்கு வீட்டினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் ரந்தனிகல மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்களத்தினருடன் சம்பவ சென்று கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசியை புலியை செலுத்தி மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட புலி சுமார் 6 அடி நீளமான 5 முதல் 8 வயது மதிக்கத்தக்கது என கூறப்படும் நிலையில்,  புலி நள்ளிரவில்  வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக  புலி நுழைந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.