பாண் விலை குறையும் வாய்ப்பு!!
அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
பாண் மற்றும் பணிஸ் என்பனவற்றை பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளது.
அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினைக் குறைக்க முடியும்.
இதனடிப்படையில் அரசாங்கம் தலையிடுமாயின் பாண் ஒன்றை 50 ரூபாவினாலும், பணிஸ் ஒன்றை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.
கருத்துகள் இல்லை