இளம் உதவி விரிவுரையாளர் பரிதாப மரணம்!!

 


 


பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இளம் உதவி விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன், மாவனெல்ல, உதுவம்கந்த பாறையிலில் ஏறிய போது, 300 அடி உயரமான பாறையில் இருந்து தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


  இந்த நிலையில், அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த விரஸ்மி கொடிதுவக்கு என்ற 27 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேரைக் கொண்ட குழுவுடன் ஆய்வொன்றுக்காக உதுவம்கந்த பகுதிக்கு சென்றிருந்த அவர் இன்று (21-08-2022) பிற்பகல் பாறையிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.


சடலம் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


                 கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.