முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

 


1. கொழும்பில் புலம்பெயர்ந்தவர்களுக்காக பணிமனை. அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது - ஜனாதிபதி அதிரடி!


2. வடக்கின் காற்றாலை மின் திட்டம் அதானி வசமானது. 


3. புதிய திட்டத்தால் இலங்கைக்கு நன்மைகள்.


4. மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு - அசச்சர் டக்ளஸ். 


5. எதிர்வரும் 2023 பெப்ரவரி 4 ஆம் திகதி 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமரின் பங்கேற்புடன் மேலும் 7 பேர் அடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


6. 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும்  என அமைச்சரவைப்  பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


7. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8. பிஸ்கட் உற்பத்திக்காகப்  பயன்படுத்தப்படும் விசேட கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாகவே பிஸ்கட்டுக்களின் விலைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக இலங்கை இனிப்பு பண்டங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


9. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாய்லாந்து  பயணித்த விமானக் கட்டணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது  ஜனாதிபதிக்கும் மனைவிக்கும் என  கிடைக்கும் வரப்பிரசாதத்தின் அடிப்படையிலேயே பணம் செ1. புலம்பெயர்ந்தவர்களுக்காக கொழும்பில் தனிப்பணிமனை. அவசரகாலச் சட்டமும் நீடிக்கப்படாது  -  ஜனாதிபதி அதிரடி!!


10. மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் பிரச்சினை அடுத்தவாரம் தீர்க்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி. 


11. அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து உப வேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


12. "வில்லியம் ரூடோ" கென்யாவின் புதிய அதிபராகத் தெரிவாகியள்ளார்.


13. இலங்கையில் இன்று 129 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


14. ஏழு பொலிஸ் அதிகாரிகள் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


15. 40 சதவீதமானவ மருந்து வகைகளைத் தற்போது உள்நாட்டில் தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


16. துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.