வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலை!!
நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் தற்போது பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. வருட இறுதி வரை விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் , பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்து சபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்தப் பிரச்சினையைத் தீர்த்து, வாராந்தம் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்த எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை. அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை