அமாவாசை நிலவிற்கு ஏன் ஆசை!!

 


விழுதுகள்  வேர்களை 

வெறுத்திடல் வேண்டாம். 
பொழுதுகள் விடிகையில் 
பூக்களே கருகிடவேண்டாம். 
சிலைகளாய் வடித்தவை 
செதுக்கா கல்லாகவே 
இருந்திடவேண்டாம். 
உறவாக நினைத்த நீ
இல்லையென்றாகவேண்டாம். 
கற்பனையில் வாழ்ந்த வாழ்வு 
கானலாகிடவும் வேண்டாம். 
நிஜங்களில் வாழும் மனம் 
நிழலாகிடவும் வேண்டாம். 
பிறவாத பிள்ளைக்கு 
பெயர் சூட்டிடவும் வேண்டாம். 
கனியாத காய்களை 
தடிகொண்டு அடித்திடவேண்டாம். 
புரியாத புதிர்கள் சில
புரிந்திடவும் வேண்டாம். 
அவிழாத முடிச்சுகளை 
அவிழ்த்திடவும்  வேண்டாம். 
அமாவாசை, நிலவிற்கு 
ஆசைப்படவும் வேண்டாம். 
நடக்காத கால்களுக்கு 
இறைவா நீ ஏன் 
சலங்கை பூட்டவேண்டும்? 


திருமதி . தேவா மாதவன் 
கொழும்ப

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.