ராணிக்கு அஞ்சலி செலுத்த இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பு!
ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பேழை இறுதி புனித பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வரிசையில் காத்து நிற்கின்றனர்.
லண்டனில் கூடியிருந்தவர்களில், 56 வயதான இலங்கை வம்சாவளி பெண் ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வனேசா நாதகுமாரன் என்ற பெண்ணுக்கே இந்த சந்தரப்பம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர், 1980ம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.
இது குறித்து கருத்துதெரிவித்துள்ள அவர்,
நான் உண்மையில் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன், என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது குடும்பம் பிரிட்டனின் அரச குடும்பத்தின் பெரும் அபிமானி என்று அவர் மேலும் கூறினார்.
இது திருப்பிச் செலுத்துதல் போன்றது. பொதுநலவாய அமைப்பிற்காக அவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் செய்ததை நாம் பாராட்ட வேண்டும்.
பிரித்தானியாவுக்காகவும் சர்வதேச நாடுகளுக்காகவும் ராணியார் அளப்பரிய சேவைகளை முன்னெடுத்துள்ளார். ஆகையினால் இந்த காத்திருப்பு வீண் போகாது.
அவரது பெரிய மாமா ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம் பெற்றவர் என்றும், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாகவும் வனேசா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை