தியாக திலீபத்தின் மாதம்!!


 இது தியாக திலீபத்தின் மாதம்.. தமிழினம் வீறுடன் பயணிக்க உரமேற்றிய.. மாதம்..

தமிழ்த் தேசிய அரசியலின் அதிஉன்னத குறியீடே திலீபம்.. அதையுணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன் திலீபனை நினைந்தேற்றுவோம்... குறிப்பாக கட்சி பேதமின்றி அவரது நினைவுநாட்களை நினைவுகூர ஒன்றுகூடுவோம்... தனியொரு கட்சியோ.. குழுமமோ தனித்து ஆக்கிரமிப்பு பாணியில் நடந்து கொள்ளும் முறை அருவருப்பானது.. இந்நிலையை தொடர்ந்து மக்களும் அனுமதிக்கமாட்டார்கள்..
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில்.. எக்காலத்திலும்.. அமைதியாகவும்.. உணர்வுபூர்வமாகவும் நினைவேந்தல்கள் நிகழ்த்தப்பட்ட வேண்டும்.. அது சர்ச்சைக்குரிய பிரதேசம் அல்ல... அதனை அனைத்து தரப்பும் நன்குணர்ந்து நடப்பார்களென்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்..
தற்கால சூழலில் தடம்மாறத் தயாரான தமிழினத்தின் ஒரு பகுதியினரின் வாசல்தோறும்.... இக்காலத்தில் திலீபன் நினைவுடனே.. அவர் வழியினிலே... ஒன்றிணைந்து செல்லுங்கள்...
தமிழ்த்தேசியத்திற்கு புத்துணர்வூட்டுங்கள்... உங்களது ஒன்றிணைதல் மூலமாக மக்களை ஓரணிப்படுத்துங்கள்.. எமக்கு கிடைத்த உன்னத அரசியல் ஆயுதம்... தியாக தீபம் மட்டுமே...
தியாகத்தின் வழி நடப்போம்..
தமிழ்த் தேசியம் காப்போம்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.