தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின இறுதிநாள் நிகழ்வுகள்!

 ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இந்த அஞ்சலி நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனி, காலை 10 மணி முதல் நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்தன.அதேவேளை கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்குக்காவடி எடுத்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.