அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்த முடியாது


 அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்தி அதி உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் அணுகுமுறை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இதனால் 2298/53 இலக்க வர்த்தமானியை மீளப் பெறுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.