யார் அரச வன்முறையின் பிதாமகன்கள்!
வன்முறையை கடை பிடித்தவர்களே வன்முறைக்கு எதிராக செயல்படுவதாக கூறிக் கொள்வதை நினைவுப்படுத்தி சமித்தாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
நடிகை தமிதா அபேரத்ன தன்னிச்சையாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இந்த அரச வன்முறையை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச வன்முறையின் பிதாமகன்கள் யார் என்பதை முழு நாடும் அறியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை