கோழி புரியாணியில் கரப்பான் பூச்சி!!

 


கரப்பான் பூச்சியுடன் கோழி புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் எச்சரித்ததுடன் 10,000 ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றுக்காக கோழி புரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர்.

அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டனர்.

அத்துடன் உணவக உரிமையாளரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை இன்று 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளிததார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.