மனைவியின் கிட்னியை விற்று கணவன் மறுமணம்!!
இந்தியாவில் மனைவிக்கு தெரியாமல் கணவர் அவரது கிட்னியை விற்று வேறு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கோட மேட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து. பங்களாதேஷத்திலிருந்து அகதியாக வந்த இவருக்கும் ரஞ்சிதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
மது போதைக்கு அடிமையாக இருந்து வந்த பிரசாந்த் அவரது குடும்பத்தை சரிவர கவனித்து வராமல் இருந்துள்ளார். அத்துடன் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் மனைவிக்கு கிட்னியில் கல் இருப்பதாக நம்பவைத்து அவரது ஒரு கிட்னியைத் திருடி விற்றுள்ளார். பின்னர் அந்தப் பணத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து பெங்களூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
வயிற்றுவலி காரணமாக வைத்திய சலை சென்று பரிசோதனை செய்த போதே மனைவிக்கு உண்மை தெரியவந்துள்ளது.
மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை